புதுடெல்லி,
இந்திய பாஸ்போர்ட் வைத்து உள்ளவர்கள், வரும் ஜன., 1 முதல் இ-விசாவை பெற்றுக் கொள்ளலாம் என டெல்லியில் உள்ள ராயல் தாய்லாந்து தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து டில்லியில் உள்ள ராயல் தாய்லாந்து துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜன., 1 முதல் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு இ- விசா பெற்றுக் கொள்ளலாம். தாய்லாந்து நாட்டவர்கள் அல்லாதவர்கள், அனைத்து விசா வகைகளுக்கும் //www.thaievisa.go.th என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது விண்ணப்பதாரர்கள் மூலமோ விண்ணப்பிக்கலாம். விசா கட்டணம் செலுத்திய 14 நாட்களுக்குள் இதில் முடிவெடுக்கப்படும்.
மேலும் சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காக, தாய்லாந்து வரும் இந்தியர்கள், 60 நாட்கள் விசா இன்றி தங்கிக் கொள்ளும் சலுகை மறு அறிவிப்பு வரும்வரை அமலில் இருக்கும். தாய்லாந்தின் தூதரகம் மற்றும் தூதரக ஜெனரல்களுக்கான இ-விசா பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.