சையத் முஷ்டாக் அலி கோப்பை; ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டம்... தமிழகத்தை வீழ்த்திய பரோடா

2 hours ago 1

இந்தூர்,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.

இந்த தொடரில் குரூப் பி-யில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழகம் - பரோடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பரோடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 222 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. பரோடா தரப்பில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 69 ரன்கள் எடுத்து அசத்தினார். தமிழகம் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Read Entire Article