சென்னை,
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்யத் துவங்கியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது.விமான நிலையத்தில் ஓடு தளத்திலும் தண்ணீர் தேங்கியது.மோசமான வானிலை காரணமாக 13 மணி நேரங்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி அதிகாலை 4 மணிக்கு விமான சேவை மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் அதிகாலை 1 மணிக்கே விமான சேவை துவங்கியது