சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பாக தள்ளிவிட்டு கொலை செய்த குற்றத்துக்காக இளைஞர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்பத்தை இழந்து தவிக்கும் மாணவியின் தங்கைகளுக்கு இளைஞருக்கான அபராதத்தில் இருந்து ரூ.25 ஆயிரமும், தமிழக அரசு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த மாணிக்கம் - தலைமைக் காவலர் ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சத்யபிரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே குடியிருப்பில் வசித்துவந்த முன்னாள் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷும் காதலித்து வந்துள்ளனர்.