சென்னை அண்ணா ஆர்ச் அருகே மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மது போதையில் பயணி பலமாக தாக்கியதில் மூக்கில் ரத்தம் வடிய நடத்துனர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
முன் பகுதி வழியாக பேருந்தில் ஏறிய கோவிந்தனை பின்னே வந்து டிக்கெட் எடுக்குமாறு கூறியபோது வாக்குவாதம் முற்றி முதலில் நடத்துனர் ஜெகன் குமார் டிக்கெட் மெஷினைக் கொண்டு கோவிந்தனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.