சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளுக்கு ஒப்புதல்

1 day ago 1

சென்னை: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயிலில் இரு மார்க்கத்திலும் வரும் 11-ம் தேதி முதல் 16 பெட்டிகளாக இணைத்து இயக்கப்பட உள்ளன.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதேநாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.

Read Entire Article