சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு மனைவிகளுடன் உல்லாசமாக இருந்ததையும் வீடியோ எடுத்து ரசித்த ‘பாலியல் சைக்கோ’ ஞானசேகரன்

15 hours ago 1

* மொபைலில் கிடந்த ஆபாச வீடியோக்களை கண்டு போலீசார் அதிர்ச்சி, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு

சென்னை: சென்னை அண்ணா பல்லைக்கழக மாணவி பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ‘பாலியல் சைக்கோ’ ஞானசேரகனின் செல்போனில் இருந்து பல் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவன் தனது மனைவிகளுடன் ‘ஓரல் செக்ஸ்’ முறையில் உல்லாசமாக இருந்ததையும் வீடியோ எடுத்து தனிமையில் ரசித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனால், போலீசார் ஞானசேகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 24ம் தேதி இரவு 2 ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனான 4ம் ஆண்டு மாணவனுடன் மறைவான இடத்தில் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து மாணவனை விரட்டி அடித்துவிட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு மாணவியின் செல்போனில் இருந்து அவரது தந்தையின் செல்போன் எண்ணை எடுத்து மிரட்டி எப்போது அழைத்தாலும் என்னுடன் வர வேண்டும் எனக் கூறி
மிரட்டினாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மறுநாள் தனக்கு நடந்த சம்பவத்தை காவல் அவசர கட்டுப்பாட்டு எண் 100 உதவியுடன் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி ஞானசேகரனை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோட்டூர்புரம் போலீசார் விசாரணையின் முடிவில், ஞானசேகரன் மீது 8 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஞானசேரகனின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். ஆனால் அவரது செல்போனில் எந்த வீடியோக்களும் இல்லை. இதனால் போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.  இதுகுறித்து ஞானசேகரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் தெரிவித்த தகவல்கள்:

கைது செய்யப்பட்ட ஞானசேரகன் (37) டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு பாலியல் அதிக நாட்டம் இருந்துள்ளது. டிப்ளமோ படிக்கும்போதே பல பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாமாக இருந்து வந்துள்ளார். அப்படி இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை, அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து அதை தனிமையில் பார்த்து ரசித்து வந்துள்ளார்.

செல்போனில் வெளிப்படையாக ஆபாச வீடியோக்களை வைத்திருந்தால், மற்றவர்கள் பார்த்து விடுவார்கள் என்பதால், ரகசியமாக செல்போனில் “தனி போல்டரில்” ஆபாச வீடியோக்களை சேகரித்து வந்துள்ளார். அந்த போல்டரை யாரும் திறக்க முடியாத படி, ரகசிய பதிவு எண் மூலம் லாக் செய்து வைத்திருந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போலீசார் தன்னை எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்று முன்கூட்டியே கணித்து, அந்த மாணவியின் பாலியல் தொந்தரவு வீடியோவை தனி போல்டரில் மாற்றிவிட்டு, செல்போனில் உள்ள வீடியோவை அழித்து வைத்திருந்தார்.

இதனால் ஞானசேகரன் கைது செய்த போது அவரது செல்போனில் எந்த வீடியோவும் இல்லாமல் இருந்தது. ஞானசேகரனுக்கு தற்போது 37 வயது ஆனாலும், அவர் இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்தும் அவருக்கு பாலியல் மோகம் குறையவில்லை. இதனால் அவர், வாரத்திற்கு 4 நாட்கள் பாலியல் பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், தனது மனைவிகளுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியையும் ஞானசேகரன் செல்போனில் வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளார்.

ஞானசேகரன் பல பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததால் அவ்வப்போது ‘ஓரல் செக்ஸிலும்’ ஈடுபட்டு வந்துள்ளார். ஓரல் செக்ஸில் ஈடுபட்டு ஞானசேகரன் முழு திருப்தி அடைந்து வந்துள்ளார். தனது மனைவிளுடன் அவர் அதேபாணியில் உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவிகளும் ஞானசேகரிடம் ‘முடியாதவனுக்கு எதுக்கு பொண்டாட்டி’ என்ற கேட்டு தகராறு செய்து வந்துள்ளனர். இதனாலேயே அவர் தனது மனைவிகளுடன் வசிக்காமல் ஊதாரியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.

அத்துடன் ஞானசேகரனுக்கு சில திருநங்கைகளுடனும் பழக்கம் இருந்துள்ளது. அவரது செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் பல இளம்பெண்கள், தனது மனைவிகள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள், திருநங்கைகள், புகார் அளித்த மாணவியின் வீடியோவும் இருந்துள்ளது. அந்த வீடியோக்களில் பெரும்பாலான வீடியோக்களில் ஞானசேகரன் பெண்களுடன் உடலுறவு கொள்வதை விட, ‘ஓரல் செக்ஸ்’ செய்யும் காட்சிகள்தான் அதிகமாக உள்ளது. வீடியோக்களை ஆய்வு செய்த சைபர் க்ரைம் போலீசார் அதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஞானசேகரன் பாலியல் உறவில் ‘ஒரு சைக்கோ’ போல் நடந்து வந்தது அவரது வீடியோ காட்சிகள் மூலம் உறுதியாகி உள்ளது. தற்போது உள்ள நிலையில் ஒரு பெண்ணை ஞானசேகரனால் முழுமையாக திருப்திப்படுத்த முடியாத நிலையில் அவர் இருந்து வந்துள்ளார்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். அதேநேரத்தில் ஞானசேகரன் செல்போனில் இருந்து தனி போல்டரில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வீடியோக்களில் மாணவிகள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்தும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஞானசேகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

* அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போலீசார் தன்னை எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்று முன்கூட்டியே கணித்து, அந்த மாணவியின் பாலியல் தொந்தரவு வீடியோவை தனி போல்டரில் மாற்றிவிட்டு, செல்போனில் உள்ள வீடியோவை அழித்து வைத்திருந்தார்.

The post சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு மனைவிகளுடன் உல்லாசமாக இருந்ததையும் வீடியோ எடுத்து ரசித்த ‘பாலியல் சைக்கோ’ ஞானசேகரன் appeared first on Dinakaran.

Read Entire Article