சாம்பியன்ஸ் டிராபி தொடர்; சாண்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு

3 hours ago 4

வெல்லிங்டன்,

8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க இன்றே இறுதி நாளாகும்.

இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் சீனியர் வீரர்களான கேன் வில்லியம்சன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லாக்கி பெர்குசன், டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம்: மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மென், டெவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேர் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சீயர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங். 


Ready for Pakistan and UAE #ChampionsTrophy pic.twitter.com/Q4tbhqm0xi

— BLACKCAPS (@BLACKCAPS) January 11, 2025


New Zealand have announced their 15-member Champions Trophy squad, with a pace trio set for their maiden senior ICC event

Details https://t.co/esocxj7pCy

— ICC (@ICC) January 11, 2025


Read Entire Article