சாத்தூர், அக்.26: சாத்தூரில் தெருவில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சாத்தூரில் நான்குவழிச்சாயை ஒட்டியுள்ள ஆண்டாள்புரம் பகுதி மக்கள் ஆடு, மாடு வளர்த்து வருகின்றனர். இவர்கள் தொழுவத்தில் மாடுகளை கட்டி வைத்து வளர்ப்பது கிடையாது. இதனால் ஆடு, மாடுகள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
தெருவில் உள்ள குடியிருப்புகளில் சேர்ந்த குப்பை கழிவுகளை வாசலில் வைத்துள்ளதை தின்பதற்காக போட்டி போட்டு செல்வதால் தெருக்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியோர் அச்சத்துடன் செல்கின்றனர். ஒரு சில மாடுகள் முட்ட பாய்கின்றன. எனவே தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் சாலை, தெருக்களில் மாடுகளை திரிய விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சாத்தூரில் தெருவில் சுற்றித்திரியும் மாடுகளால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.