லக்னோ,
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டவரான 17 வயது உன்னதி ஹூடாவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் அனுபவம் வாய்ந்த பி.வி.சிந்து 21-12, 21-9 என்ற செட் கணக்கில் உன்னதி ஹூடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து 119-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வூ லூவ் யுவை எதிர்கொள்கிறார்.