சர்வதேச எழுத்தறிவுத் தினம்

1 week ago 8

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (United Nations Educational, Scientific and Cultural Organization – UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத்துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.

இந்நிறுவனம் எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்றை நடத்தியது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

எழுத்தறிவின்மையை உலகிலிருந்து அறவே அழிப்பதற்காக ஆற்றவேண்டிய பணிகள், நடைமுறைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு ஒரு அறிக்கையையும் அளித்தது. எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாள் என யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழு பிரகடனம் செய்தது. 1967ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் நாள் சர்வதேச எழுத்தறிவு நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

The post சர்வதேச எழுத்தறிவுத் தினம் appeared first on Dinakaran.

Read Entire Article