கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

1 week ago 13

சிகாகோ,

தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கேட்டர்பில்லர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அதன் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த உள்ளது. முதல்-அமைச்சரின் அமரிக்கா பயணத்தில் இதுவரை சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

 

Read Entire Article