கென்யாவில் பறவைகளின் கூடுகள், முட்டைகள், குஞ்சுகளை தாக்கி அழிக்கும் இந்தியக் காகங்கள்

4 weeks ago 6
இந்தியக் காகங்களால் கென்யா நாட்டில் உள்ள பறவையினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பறவைகளின் கூடுகள், முட்டைகள், குஞ்சுகளை காகங்கள் தாக்கி அழிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1891-ஆம் ஆண்டு கென்யாவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியக் காகங்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காகங்களால் உள்ளூர் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையடுத்து, ஸ்டார்லிசைடு என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி காகங்களைக் கட்டுப்படுத்த கென்யா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 200 காகங்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article