கூடலூரில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

3 weeks ago 4

கூடலூர், அக். 26: கூடலூரில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 21ம் தேதி படத்துடன் செய்தி வெளி வந்திருந்தது.

இதன் எதிரொலியாக நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் நேற்று கூடலூர் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் இருந்தனர். இங்கே விவசாயிகள் ஆர்வமுடன் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த கொள்முதல் நிலையத்தில் 17 சதவீதத்திற்கு குறைவாக ஈரப்பதம் உள்ள நெல் 40 கிலோ எடை கொண்ட மூடை ரூ.980க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

The post கூடலூரில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article