குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: அருவிகளில் ஆனந்த குளியல்

3 days ago 3

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதற்கிடையே, இன்று விடுமுறை தினம் என்பதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அருவியில் அவர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.

அத்துடன், கார்த்திகை மாதம் என்பதால், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் குற்றாலத்தில் குவிந்தனர். மெயின் அருவியில் சீராக விழும் தண்ணீரில் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று காலை முதல் மதியம் வரையில் மிதமான வெயிலாகவும், மாலையில் குற்றாலம் பகுதியில் அவ்வப்பொழுது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இன்று காலையில் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

 

Read Entire Article