“குற்றவாளிகளின் கூடாரமாக திகழ்கிறதா திராவிட மாடல் அரசு?” - தமாகா காட்டம்

14 hours ago 1

சென்னை: “குற்றவாளிகளின் கூடாரமாக திகழ்கிறதா திராவிட மாடல் அரசு?” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னை - கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவனை தாக்கியுள்ளனர். மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Read Entire Article