கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் எலக்ட்ரீஷியன் தீக்குளித்து தற்கொலை: போலீசார் விசாரணை

12 hours ago 4

கீழ்பென்னாத்தூர், ஜூலை 17: கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக எலக்ட்ரீஷியன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கிருஷ்ணாபுரம் வஉசி தெருவை சேர்ந்தவர் தேவநாதன் மகன் ராஜரங்கன்(36), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி வெண்ணிலா(30). இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜரங்கன் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் லால் பகதூர் தெருவில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து, அங்குள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், நேற்று முன்தினமும் தகராறு நடந்த நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராஜரங்கன் மனமுடைந்து காணப்பட்டாராம்.

பின்னர், மாலை வேலை முடிந்து புறப்பட்டு சென்றவர் கீழ்பென்னாத்தூர் சந்தைமேடு பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு, தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் எலக்ட்ரீஷியன் தற்கொலை கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் எலக்ட்ரீஷியன் தீக்குளித்து தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article