'கீழ்த்தரமான அரசியல் ஆதாயம்'... மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

1 month ago 5

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.

இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, திமுக எம்.பி.க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டு கீழ்த்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது; கேவலமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article