ஹமாஸ் அமைப்பின் பல முக்கியத் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தொடர ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
போரால் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் அடைந்துவரும் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும், நிவாரண பொருட்களை அனுமதிக்க வேண்டும், பாலஸ்தீன சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் பிணை கைதிகளை விடுவிக்கவும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.