காவல்துறையினர் பற்றாக்குறையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு - அண்ணாமலை

9 hours ago 2

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த மூவர் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யாததை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் கொடுவாய் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது;

"தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் தேர்வுகள் நடத்தப்படவில்லை. காவல்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவல்துறையினரின் எண்ணிக்கை பற்றாக்குறையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பணிகளில்தான் காவல்துறையினர் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு, வேலை செய் என்றால் எப்படி செய்ய முடியும்? காவல்துறைக்கு தயவுசெய்து அதிகாரம் கொடுங்கள்.

பல்லடம் மூவர் படுகொலை வழக்கை சிபிஐக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். மூவர் படுகொலை வழக்கில் நீதி கொடுக்கவில்லை என்றால் பொது வாழ்வில் இருந்து என்ன பயன்? மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ எந்தவொரு வழக்கையும் விசாரிக்க முடியாது. சிபிஐ விசாரணை கோரி 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று விரைவில் கவர்னரை சந்திப்போம்."

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும், எனவும், நிதிச்சுமையை காரணமாக தமிழக அரசு கூறக்கூடாது என கூறினார். மேலும், தமிழக அரசு மனது வைத்தால் 2 நாட்களில் மக்களுக்கு ரூ.1,000 வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Read Entire Article