பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் காவல் உதவி செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்தச் செயலியானது இந்திய மாநில காவல்துறைகளில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும். அவசர உதவி பட்டனை – பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற ‘‘அவசரம்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையிடமிருந்து அவசர சேவை வழங்கப்படும். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க ‘‘Dial-100” என்ற செயலி ‘‘காவல் உதவி” செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு உடனடி பாதுகாப்பு கொடுக்கப்படும். இது தமிழக அரசு மற்றும் காவல் துறையில் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் செயலி என்பதால் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்கள் அல்லது ஆபத்தான தருணங்களில் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். கூகுள் ஸ்டோரில் காவல் உதவி (Kaaval Uthavi) செயலியை இலவசமாகப் பெறலாம்.
The post காவல் உதவி செயலி! appeared first on Dinakaran.