காரிமங்கலம் தாலுகாவில் மக்கள் குறைதீர் முகாம்

1 month ago 6

காரிமங்கலம், நவ.21: காரிமங்கலம் தாலுகா, காரிமங்கலம் மற்றும் பெரியாம்பட்டி ஆர்ஐ அலுவலகத்தில், மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. ஆர்ஐக்கள் மகேஷ்பாபு, வடிவேல் ஆகியோர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா திருத்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் விஏஓ.,க்கள் முருகன், கணேசன், கதிரவன், அசோக், சிலம்பரசன், திருநாவுக்கரசு, கோகிலா மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post காரிமங்கலம் தாலுகாவில் மக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article