காட்டுக் கோழி (Junglefowl)

20 hours ago 4

காடுகளில் வாழும் கோழி இனப்பறவை காட்டுக் கோழி (Junglefowl) என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெரிய பறவைகளாகவும், வண்ணமயமான இறகுகளைக் கொண்டும் இருக்கும். பல பறவைகள்போல இவற்றில் ஆண் பறவைகளான சேவல்கள் முட்டைகளை அடை காப்பதில் பங்கு வகிப்பதில்லை. பெண் பறவைகளான கோழிகளே இந்தப் பணிகளைச் செய்கின்றன.

காட்டுக்கோழிகளின் உணவு விதைகள் என்றாலும் இவை பூச்சிகளையும் உண்ணக்கூடியவை. குறிப்பாக இதன் குஞ்சுகளுக்குப் பூச்சிகளை உணவாகத் தரும். காட்டுக் கோழிகளில் ஒரு இனமான சிவப்புக் காட்டுக்கோழி தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என்று கருதப்படுகிறது. என்றாலும், சிலர் வெள்ளைக் கானாங்கோழிதான் வீட்டுக்கோழிகளின் மூதாதையர் எனச் சொல்வோரும் உண்டு. இலங்கைக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப்பறவையாக உள்ளது.

The post காட்டுக் கோழி (Junglefowl) appeared first on Dinakaran.

Read Entire Article