சென்னை,
நடிகர் சிம்புவிற்கு 'மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய ௩ படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. சிம்பு தற்போது இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து 'ஓ மை கடவுளே' வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இப்டத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பேண்டஸி காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது சிம்புவின் புதிய படம் குறித்த அப்பேட் வெளியாகி உள்ளது. அதாவது, வெற்றிமாறனின் கதை, திரைக்கதை, வசனத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் படம் ஒன்றை இயக்க போவதாகவும், அதில் சிம்பு நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.