கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா

4 days ago 4

திருவள்ளூர்: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே ரெசிடென்சியல் சீனியர் செகன்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா நடைபெற்றது.  கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே ரெசிடென்சியல் சீனியர் செகன்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு ஆர்எம்கே கல்வி குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் யலமஞ்சி பிரதீப், இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, ஆலோசகர் எம்.எஸ்.பழனிச்சாமி, டி.பிச்சாண்டி, வி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சங்க்லா சப்னா அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தார்.

இந்த விழாவில் மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாச பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைத்திலும் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இந்த கல்வி நிறுவனத்தை சுற்றி பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. நாங்கள் படிக்கும் காலத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுகிறேன்.

நீங்கள் ஜனநாயகத்தோடு கல்வி கற்று வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நீங்கள் சிறந்த முறையில் கல்வி கற்று பெரியபெரிய இன்ஜினியர்களாகவும், ஐஏஎஸ், ஐபிஸ்களாகவும் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன் என்றார். இந்த விழாவில் ஆர்.எஸ்.முனிரத்தினம் பேசுகையில், எங்களது கல்வி நிறுவனங்களின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து முதலாம் ஆண்டில் சேர்த்துள்ளீர்களோ, அதே
நம்பிக்கையோடு உங்களை நல்ல ஒழுக்கத்துடனும், சிறந்த கட்டுப்பாட்டுனும், நல்ல முறையில் கல்வி கற்க வைத்து, அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவைப்பது எங்களது கடமையாகும், என்றார்.

The post கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article