வேலாயுதம்பாளையம், அக்.26: கரூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார பணி துரிதப்படுத்தப்படும் என்று மாநகராட்சியில் புதிதாக நகர் பொறுப்பேற்றுள்ள புதிய நகர்நல அலுவலர் டாக்டர் கௌரி சரவணன் தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்கு நகர் நல அலுவலராக புதிதாக டாக்டர் கௌரி சரவணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: நான் இதற்கு முன்பாக திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றியுள்ளேன். திருப்பூர் மாநகராட்சியுடன் ஒப்பிடும்போது கரூர் மாநகராட்சியின் மக்கள் தொகை மிகவும் குறைவு. திருப்பூர் மாநகராட்சியில் 12 லட்சம் மக்கள் தொகை உள்ளது.
கரூர் மாநகராட்சி 3 லட்சம் மக்கள் தொகை மட்டுமே உள்ளது. பெரிய மாநகராட்சியில் பெறப்பட்டுள்ள நல்ல அனுபவங்களை கரூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரப் பணியில் தனி கவனம் செலுத்தி புது பொது சுகாதாரத்தில் தனிக் கவனம் செலுத்தி பொதுமக்களில் சுகாதாரம் முழுமையாக காக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் பொது சுகாதாரத்திற்கு தனிக் கவனம் செலுத்தி கரூர் மாநகராட்சியை முதன்மையான மாற்ற சுகாதாரப் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
The post கரூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரப்பணிகள் துரிதப்படுத்தப்படும் appeared first on Dinakaran.