கரூர், ஜன.8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சாலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு, வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். உதவி செயற்பொறியாளர் நிலை உதவி உயர்வினை கால தாமதமின்றி வழங்கவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து ஒன்று கூடினர். சிறிது நேரம தங்கள் கோரிக்கை குறித்து பேசிய அவர்கள், திடிரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 70 பேர் கைது செய்யப்படனர்.
The post கரூர் எம்பி ஜோதிமணி பேச்சு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் appeared first on Dinakaran.