கன்னியாகுமரியில் உணவு கழிவு ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது

10 hours ago 2

கன்னியாகுமரி,

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், உணவு கழிவுகள் உள்ளிட்டவை எல்லையை தாண்டி கன்னியாகுமரி மட்டுமின்றி திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளில் கொட்டுவது வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் உணவு கழிவுகள் ஏற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 5 வாகனங்களில் இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் உள்பட பல்வேறு உணவு கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரை கைது செய்தனர். கைதான 9 பேரும் அசாம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article