கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

2 hours ago 2

கடலூர்,

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது நாளை காலைக்குள் புயலாக உருவெடுக்க உள்ளது. இந்த புயலுக்கு 'பெங்கல்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, தமிழக கடலோர மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Read Entire Article