கடந்த அக்டோபர் மாதத்தில் மெட்ரோ ரயிலில் 90.83 லட்சம் பேர் பயணம்

2 weeks ago 3

சென்னை: அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு ஜனவரியில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரியில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதம் 86,82,457 பயணிகளும், ஏப்ரலில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூனில் 84,33,837 பயணிகளும், ஜூலையில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மற்றும் செப்டம்பரில் 92,77,697 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 6ம் தேதி மட்டும் 4,00,042 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 28,88,168 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 4,287 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,400 பயணிகள், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,75,666 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20,50,699 பயணிகள் மற்றும் விமான சாகச நிகழ்ச்சி, அரசினர் தோட்டம் மெட்ரோ 59,776 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கடந்த அக்டோபர் மாதத்தில் மெட்ரோ ரயிலில் 90.83 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article