ஓசூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

3 weeks ago 3

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: பெங்களூருவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், பெங்களூருவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சோமனஹள்ளி என்ற இடத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்து இருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு ஓசூரில் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டு வரப்போகிறது என்பதற்காக இல்லாமல், 5,000 ஏக்கர் நிலப் பரப்பில் சர்வதேச தரத்திற்கு இணையான விமான நிலையத்தை இங்கே நாம் கொண்டு வரவேண்டும் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் பேசியதாகக் கூறப்படுகிறது. ஒரு விமான நிலையத்திற்கும், மற்றொரு விமான நிலையத்திற்குமான இடைவெளி 50 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிலையில், அறிவிக்கப்பட்ட ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கும், கர்நாடக அரசு முடிவு செய்துள்ள சோமனஹள்ளி என்ற இடத்திற்கும் இடையிலான தூரம் 47 கிலோ மீட்டர் மட்டுமே.

ஓசூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டால், பெங்களூரின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில், ஓசூருக்கு அருகில் உள்ள சோமனஹள்ளியில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ஓசூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

The post ஓசூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article