'ஒவ்வொரு ரெயில் டிக்கெட்டுக்கும் 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது' - மத்திய ரெயில்வே மந்திரி

10 hours ago 2

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய ரெயில்வே மந்த்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று பதிலளித்தார். அப்போது அவர், ஒரு ரெயில் டிக்கெட் 100 ரூபாய் என்றால், பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் 54 ரூபாய் மட்டுமே வசூலிப்பதாகவும், 46 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக ரூ.56,993 கோடி மானியம் வழங்குகிறது என்று அவர் கூறினார். மேலும், விரைவு ரெயில் சேவை குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், குஜராத்தில் உள்ள புஜ் மற்றும் அகமதாபாத் இடையே நமோ பாரத் விரைவு ரெயில் சேவை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், அதன் சிறப்பான சேவை பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Read Entire Article