சென்னை: சிறுபான்மை மக்களுக்கு துரோகங்களை செய்துவிட்டு வாக்கு அரசியலுக்காக நடிப்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலனில் உண்மையாக அக்கறையோடு இருப்பது திமுகதான். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக திமுக அரசு எப்போதும் திகழும். சமத்துவத்தை போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல். மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை தூண்டி பிடிவாத அரசியல் செய்பவர்களுக்குதான் நாங்கள் எதிரி. எந்த மதமாக இருந்தாலும் அது அன்பை மட்டுமே போதிக்கும். மக்கள் வேறுபட்டு இருந்தாலும் மனங்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் சொற்களே, நாம் எந்த அரசியலை பேசுகிறோம் என்பதை வெளிப்படுத்தும். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இந்தியா வளரும்.
The post ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.