ஒரேநாளில் 64கோடி வாக்குகளை எண்ணி முடித்த இந்தியா... உங்களுக்கு ஏன் தாமதம்: எலான் மஸ்க்

2 hours ago 1

வாஷிங்டன்,

அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இதன்படி அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் கலிபோர்னியா ஆகும். இங்கு 3.9 கோடி மக்கள் வசிக்கின்றனர், இதில் 1.6 கோடி பேர் இந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர். தற்போதைய தகவலின் அடிப்படையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டெரெக் டிரான் 480 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். தேர்தல் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் வெற்றியாளர் யார் என தெரியவில்லை, இதில் கலிபோர்னியாவில் 3 லட்சம் வாக்குகள் எண்ணப்படவில்லை.

இந்நிலையில்,இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகளை எண்ணி விட்டார்கள். ஆனால், 16 நாட்கள் ஆகியும் கலிபோர்னியாவில் 1.6 கோடி வாக்குகளை இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

India counted 640 million votes in 1 day. California is still counting votes ♂️ https://t.co/ai8JmWxas6

— Elon Musk (@elonmusk) November 24, 2024
Read Entire Article