புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் சைபர் மோசடிகள் தொடர்பாக ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதிய சைபர் மோசடியாக முதலீடு மோசடி பெருமளவில் நடந்து வருவதாக எச்சரித்துள்ளது. 2016ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய முதலீடு மோசடியில் ஈடுபடும் நபர்கள் வேலையில்லா இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், ஏழைகளை குறிவைக்கின்றனர். கிரிப்டோகரன்சி, பங்குச்சந்தையில் முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டித்தருவதாக ஆசை காட்டி முதலில் சொற்ப அளவில் லாபத்தை தந்து பிறகு மொத்த பணத்தையும் இவர்கள் சுருட்டுகின்றனர்.
இதற்கு கூகுள் விளம்பர தளம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அச்சுறுத்தலை தடுக்க உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) கூகுளுடன் இணைந்து தகவல்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் சட்டவிரோத கடன் ஆப் மோசடிகளை தடுக்க பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இணைய குற்றவாளிகளால் தவறாக பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப் மூலம் நிதி மோசடிகள் நடந்ததாக 2024 மார்ச் வரையிலும் 14,746 புகார்கள் வந்துள்ளன எனக் கூறி உள்ளது.
The post ஒன்றிய உள்துறை எச்சரிக்கை; இணைய வழி முதலீடு மோசடி குறித்து உஷார் appeared first on Dinakaran.