ஒட்டன்சத்திரம் சந்தைக்கு ஆந்திரா பச்சை மிளகாய் வரத்து: ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வியாபாரிகள்

14 hours ago 2

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம்  காய்கறி சந்தைக்கு ஆந்திராவிலிருந்து பச்சை மிளகாய் வரத்து தொடங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல், தேனி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மிளகாய் சாகுபடி நடைபெறுகிறது. இந்நிலையில் மழை மற்றும் நோய் தாக்குதலால் மிளகாய் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஒட்டன்சத்திரம்  காய்கறி சந்தைக்கு மிளகாய் வரத்து சரிந்தது.

மேலும் நோய் தாக்குதலுக்கு உள்ளான மிளகாய்க்கு உரிய விலையும் கிடைக்கவில்லை இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து பச்சை மிளகாய் கொண்டுவரப்பட்டு ஒட்டன்சத்திரம்  காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. தரமான மிளகாய் கிடைத்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு பச்சை மிளகாயை கொள்முதல் செய்து சென்றனர்.

இதனிடையே தொடர் கனமழையால் ஆண்டிபட்டியில் வாழை இலை பெறும் வீழ்ச்சியை சந்தித்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். விழுப்புரம் கடலூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் வாழை இலையை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை மேலும் கடந்த வாரம் ரூ.800வரை ஏலம் போன ஒரு கட்டு வாழையிலை தற்போது ரூ.200 க்கு மட்டுமே விற்பனையாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

The post ஒட்டன்சத்திரம் சந்தைக்கு ஆந்திரா பச்சை மிளகாய் வரத்து: ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வியாபாரிகள் appeared first on Dinakaran.

Read Entire Article