சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய விசிக உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், ஓட்டை உடைசல் பேருந்துகள் என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் பகிரப்பட்டு வருகிறது. ஏன் போக்குவரத்துத்துறை தொடர்ந்து டார்கெட் செய்யப்படுகிறது என்பது குறித்து அமைச்சர் விளக்குவாரா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 589 தாழ்தள பேருந்துகள் உட்பட 3004 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. டெண்டர் விடப்பட்டு கூடு கட்டும் பணியில் 2 ஆயிரத்து 832 பேருந்துகள் உள்ளது. அவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இது தவிர டெண்டர் நிலையில் 1614 பேருந்துகள் உள்ளது. ஜெர்மன் நிதி உதவியுடன் 500 புதிய மின்சார பேருந்துகள் வாங்க உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வரும் ஏப்ரலில் 500 புதிய மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதே, மேலும் 500 மின்சார பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதிகாரிகள் கவனக்குறைவு காரணமாகவே பழுதான பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுவிடுகிறது.தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தன் காரணமாக பள்ளி நேரத்தில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, குறிப்பிட்ட நேரத்தில் அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
The post ஏப்ரல் மாதம் 500 புதிய மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.