ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே தண்டவாளத்தில் இரும்பு ராடு: கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது

2 days ago 1

தாம்பரம்: ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே தண்டவாளத்தில் இரும்பு ராடு போன்ற ெபாருள் கிடந்தது. ரயில் ஓட்டுனர் சாமர்த்தியத்தால் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை நோக்கி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. வண்டலூர்-ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே வந்தபோது திடீரென பெரிய அளவில் சத்தம் வந்துள்ளது. உடனே ஓட்டுநர், பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். இதையடுத்து, ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ரயில் சக்கரத்தில் இரும்பு பொருள் சிக்கி இருந்ததால் சத்தம் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரயிலில் சிக்கிய இரும்பு பொருள், ஊழியர்கள் உதவியுடன் உடனடியாக அகற்றப்பட்டது. அதற்கு பிறகுதான் பயணிகள் சற்று நிம்மதியடைந்தனர். இரும்பு பொருள் எப்படி வந்தது என்று அதிகாரிகள் விசாரித்தனர். அப்போதுதான், ‘நேற்றிரவு தண்டவாள பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், வேலையை முடித்து விட்டு இரும்பு ராடு போன்ற பொருளை விட்டு சென்றுள்ளனர். அதனால்தான் இநத சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இருப்பினும் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடந்து வருகிறது.

கொல்லம் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால் அடுத்தடுத்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே தண்டவாளத்தில் இரும்பு ராடு: கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது appeared first on Dinakaran.

Read Entire Article