ஊட்டி அருகே மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் நீலநிற குறிஞ்சி மலர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

1 day ago 4


ஊட்டி: ஊட்டி அருகே மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் நீலநிற குறிச்சி மலர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, `ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ என்ற வகை நீலநிற குறிஞ்சி மலர்கள், ஊட்டி அருகே கெங்கமுடி பகுதியில் உள்ள தோடர் பழங்குடியின மந்தான பிக்கபத்திமந்து கிராமத்தை ஒட்டியுள்ள மலைச்சரிவில் பூத்து குலுங்குகின்றன. 2012ம் ஆண்டுக்கு பிறகு இந்த மலைப்பகுதியில் பூத்துள்ள இந்த மலர்களை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மலைகள் முழுவதும் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அந்த மலையை நீண்ட தூரத்திலிருந்து பார்க்கும் போது நீல நிறத்திலான போர்வையை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஊட்டி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலநிற குறிஞ்சி மலரை பார்க்க அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள மலைப்பகுதி வனப்பகுதி என்பதனால் அங்கு யாரும் செல்ல வேண்டாம். குறிஞ்சி மலர்களை சேதப்படுத்த கூடாது. வனத்திற்குள் நுழைந்து அவற்றை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊட்டி அருகே மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் நீலநிற குறிஞ்சி மலர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article