பெய்ஜிங்: திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் திட்டத்துக்கு புதனன்று சீனா ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 137பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த அணையை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா கவலை அடைந்துள்ளது. சீனா அணையை கட்டினால் பிரம்மபுத்திரா மீது சீனாவுக்கு அதிகாரம் வந்துவிடுவதோடு, எல்லைப் பகுதிகளில் இருந்து பெரிய அளவில் தண்ணீரை திறந்து இந்தியாவுக்குள் விடவும் வாய்ப்பு உள்ளதால் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் கூறுகையில், ‘‘பிரம்மபுத்திரா மீது அணை கட்டுவது குறித்து சீன பல தசாப்தங்களாக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எல்லை தாண்டிய நதிகளின் வளர்ச்சிக்கு சீனா எப்போதும் பொறுப்பேற்கிறது. சீனாவின் நீர்மின்சார மேம்பாடு குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் இந்தியா, வங்கதேசத்தை பாதிக்காது” என்றார்.
The post உலகின் மிகப்பெரிய அணை இந்தியா, வங்கதேச பகுதிகளை பாதிக்காது: சீன வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.