உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க அவசியம் என்ன? - நீலம் பண்பாட்டு மையம் கேள்வி

4 hours ago 4

சென்னை,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த உணவுத் திருவிழா வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைக் கொண்ட 35 அரங்குகள் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. தினமும் மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிடக் கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவு புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

#சென்னை_மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?
பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள்.
ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை #நீலம்பண்பாட்டுமையம்
வன்மையாகக் கண்டிக்கிறது.… pic.twitter.com/yGBWE6DSHa

— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) December 22, 2024


Read Entire Article