உங்களை தேடி உங்கள் ஊரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் நேரில் ஆய்வு

21 hours ago 3

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”சிறப்பு முகாம் நடைபெற்றது. நாயக்கன்பாளையம் ஊராட்சி பாலமலை கிராமத்தில், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீண்டதூர கம்பியில்லா இணைய இணைப்பை கலெக்டர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டார். மேலும், மாங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவியர்களின் கற்றல் திறன் மற்றும் மதியம் வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், குஞ்சூர்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் வேண்டி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்டகாவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர்சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஸ்வேதா சுமன் ,துணை மேயர் வெற்றிச்செல்வன், உதவி ஆட்சியர்(பயிற்சி) அங்கத்குமார் ஜெயின்,வருவாய் கோட்டாசியர் கோவிந்தன், துணை ஆட்சியர்(பயிற்சி) மதுஅபிநயா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ், நாயக்கன்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்திபிரியா, துணைத் தலைவர் சின்னராஜ்,வட்டாட்சியர் மணிவேல்,மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, ஆதிதிராவிடர் நல அதிகாரி மணிமேகலை, திறன் மேம்பாட்டு உதவி இயக்குனர் வளர்மதி,அரசு ஐ.டி.ஐ முதல்வர் லீமாரோஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உங்களை தேடி உங்கள் ஊரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article