ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

9 hours ago 2

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு 12000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 10.01.2025 காலை 8.00 மணி முதல் 01.05.2025 காலை 8.00 மணி வரை தண்ணீர் திறப்பு மற்றும் தண்ணீர் நிறுத்தம் முறையில் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article