சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 19ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 7ம் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 2 முறை இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் வி.சி.சந்திரகுமார். 2011 முதல் 2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்தவர் வி.சி.சந்திரகுமார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு appeared first on Dinakaran.