ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த கார் - ஒருவர் படுகாயம்

4 hours ago 3

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் செங்கோடம்பாளையம் பகுதியில் சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த கார், சாலையோரம் நின்ற 3 இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் வீட்டின் முகப்பு பகுதி முற்றிலுமாக சிதைந்தது. காரை ஓட்டிச் சென்ற நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதே சமயம், வீட்டில் இருந்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article