பெங்களூரு: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் உலக விண்வெளி விருது பெற்றுள்ளார். உலக விண்வெளி விருது வழங்கும் விழா இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடந்தது. இதில் சந்திரயான் 3 பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சந்திரனின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கிய முதல் வரலாற்று சாதனையை குறிக்கும் வகையிலும் வேர்ல்ட் ஸ்பேஸ் விருதை வழங்கி கவுரவித்தது.
இந்த விருதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெற்றுக்கொண்டார். மேலும் இஸ்ரோவின் சந்திரயான்3 திட்டத்துக்கு சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த பணியானது விஞ்ஞான ஆர்வம் மற்றும் செலவு குறைந்த பொறியியலின் ஒருங்கிணைப்பை எடுத்து காட்டுகிறது என்று இந்திய விண்வெளி கூட்டமைப்பு பாராட்டியுள்ளது.
The post இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு உலக விண்வெளி விருது appeared first on Dinakaran.