இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

2 hours ago 2

சென்னை,

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மூன்று மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த 50 நாட்களில் மட்டும் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுகோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, இன்று (நேற்று) மேலும் 37 பேரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என இலங்கை கடற்படையின் தொடர் அராஜகப் போக்கு, தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கிலும், மீன்பிடித் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடும் வகையிலும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 37 பேர் கைது - இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு.நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்திருக்கும்…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 21, 2024
Read Entire Article