இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை ?

2 hours ago 2

சென்னை ,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 410 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை தற்காலிக புயலாக ('பெங்கல்' புயல்) உருவெடுக்கும். இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ம் தேதி காரைக்காலுக்கும், மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தேனி , ராமநாதபுரம் , திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article