இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணி தீவிரம்

3 hours ago 5

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

இந்தியாவின் கனவுத் திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்காக பல்வேறு பரிசோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நடத்தி வருகிறது. விண்ணில் செயற்கைக்கோள் களை ஒன்றாக இணைக்கும் நவீன தொழில்நுட்ப அறிவு அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை' என்ற பணிக்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது.

இது ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும். இதனை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதையில் செலுத்தி, விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களையும் இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையை நிகழ்த்த உள்ளது. இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி கடந்த 30-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்தது.ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதையில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணிகளை இஸ்ரோ தற்போது ஈடுபட்டுள்ளது. இதன்படி இரு செயற்கை கோள்கள் இடையேயான தூரம் 230 மீட்டர் தூரத்தில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதை செய்யும் 4வது நாடு என்கிற பெருமையை இந்தியா இதன் மூலம் பெறுகிறது.


SpaDeX Docking Update:

SpaDeX satellites holding position at 15m, capturing stunning photos and videos of each other! ️️

#SPADEX #ISRO pic.twitter.com/RICiEVP6qB

— ISRO (@isro) January 12, 2025


Read Entire Article