இன்ஸ்டா பிரபலம் அபார்ட்மெண்டில் சடலமாக கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

14 hours ago 1

சண்டிகர்,

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த சிம்ரன் சிங்(25), அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தார். சமூக வலைதளத்தில் பிரபலமான இவர், பிரீலான்ஸ் ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றி வந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

கடைசியாக இவர் கடந்த 13-ந்தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு சிம்ரன் சிங் தனது சமூக வலைதள பக்கங்களில் எந்த பதிவையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிம்ரன் சிங் தனது அறையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவருடன் தங்கியிருந்த தோழி ஒருவர் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிம்ரன் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article